சாதி வாரி கணக்கெடுப்பு: அரை நிர்வாண போராட்டத்தில் சீர்மரபினர்!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Continues below advertisement

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Continues below advertisement

 தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகத்தில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன்பின்னர் இடஒதுக்கீடு மறுவரையறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்தும், தற்போதைய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் மாநில தலைவர் அன்பழகன் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்தில் கோஷமிட்டார். திடீரென்று அவர் தனது வேட்டியை கழட்டி விட்டு கோவணம் கட்டிய நிலையில் கோஷமிட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் வேட்டி கட்டிக்கொண்டார். 

அதன்பிறகு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களை போலீசார் அழைத்துச் சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இந்த ஆர்ப்பட்டத்தில் அரை நிர்வாணமாக நின்றபோது கலெக்டர் அலுவலக வளாகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்ற சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் ஆட்சி செய்த அதிமுக அரசு சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் காட்டியதாகவும், தங்கள் இட ஒதுக்கீட்ட்டில் ஒருமித்தமாக செயல்பட்டதாகவும் கூறி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது சீர் மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் அதிமுக அரசிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாகன பிரச்சாரம் வரை செய்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் சீர் மரபினர் சங்கத்தை சேர்ந்த வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டு இட ஒதுக்கீடு செய்ய தவறிய அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரம் செய்தனர். 

சட்டமன்ற தேர்தலும் முடிந்து தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்துள்ள திமுக அரசும் தங்களது சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறி ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு நாளில் சீர் மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்றும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மேகமலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு RTPCR சான்று கட்டாயம்; தேனி கலெக்டர் உத்தரவு!

மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் தேனி இளைஞர்கள்!

Continues below advertisement
Sponsored Links by Taboola