தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. 35 வயதான இவர், இந்திய  துணை ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரராக இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி சசிதாரணி (26). இந்த தம்பதிக்கு விமல் 6 வயதில் மகன் உள்ளார். சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிச்சாமி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று கடமலைக்குண்டுவில் உள்ள சசிதாரணியின் சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் செல்ல மாரிச்சாமி முடிவு செய்தார்.


PM Modi Residence: அதிகாலையில் வந்த தகவல்...! பிரதமர் வீட்டின் மேல் பறந்தது ட்ரோனா ? அதிர்ச்சி அடைந்த போலீஸ்!




அதன்படி மாரிச்சாமி, தனது மனைவி சசிதாரணி, மகன் விமலுடன் மல்லிங்காபுரத்தில் இருந்து  தனது இரண்டு சக்கர வாகனத்தில் கடமலைக்குண்டுவுக்கு சென்று கொண்டிருந்தார். தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்தது.


TN Rain Update: மதியம் 1 மணி வரை 23 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.. எந்தெந்த மாவட்டங்களில்.. மழை நிலவரம் இதோ..




அந்த வேனை உசிலம்பட்டியை சோ்ந்த மலைச்சாமி (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டி அருகே வந்தபோது வேனும், மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் மோட்டாா்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மாரிச்சாமி, சசிதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிறுவன் விமல் படுகாயமடைந்தான். தனது கண்முன் தாய், தந்தை உயிரிழந்து கிடந்ததை கண்ட சிறுவன் கதறி அழுதான். இந்த காட்சி, காண்போர் கண்களை குளமாக்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


Opposition Meeting : திடீர் முடிவு...எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு...வேறு இடத்திற்கு மாற்றமா..? என்ன காரணம்?


பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த விமலை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மலைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர