தேனி மாவட்டம் தேவாரம் மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ரத்தினம். இவர்களது மகன் யோகேஷ்குமார் வயது 24. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இந்திய ராணுவத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ராணுவ பயிற்சிகளை முடித்துவிட்டு, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த 12-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் யோகேஷ் குமார்  உயிரிழந்தார்.


Leaders Wishing ABPNadu: 3 ஆம் ஆண்டில் நடைபோடும் ABP நாடு.. குவிந்த அன்பான வாழ்த்துகள்.. பாராட்டுகளை பொழிந்த தலைவர்கள்!




பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் ெகாண்டு வரப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்றனர்.


Pipe Bomb Attack On Japan PM : ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பு சம்பவம்..




அங்கு ராணுவ வீரரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்., மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.


Krishnagiri Caste killing: காதல் திருமணத்தால் ஆணவக்கொலை.. கிருஷ்ணகிரியில் மகன், தாயை வெட்டிக்கொன்ற கொடூரம்




மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றனர். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண