திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் மூடப்பட்டு சீல் வைத்த மதுபான கடையை திறந்து ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்தனர். இதனை பொதுமக்கள் தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடையை திறந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறி கடையை பூட்டி சென்றனர்.


Pen Monument: 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..




தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 500 கடைகளை மூட நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 159 மதுக்கடைகளில் 15 கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் 5 கடைகளும் வத்தலகுண்டு பகுதியில் இரண்டு கடைகளும் பழனி பகுதியில் நான்கு கடைகளும் ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு கடைகள் என்ன 15 கடைகள் நேற்று முன் தினம் இரவு விற்பனை முடிந்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. 


TN Rain Alert: சென்னையில் வெளுத்துக்கட்டும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 3 மணிநேரத்துக்கான அப்டேட் இதோ..


இந்த நிலையில், நேற்று காலை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பூட்டப்பட்ட ஒரு மதுபான கடையை ஊழியர்கள் சட்டவிரோதமாக சீலை பிரித்து, திறந்து உள்ளே இருந்த மது பாட்டில்களை சிலருக்கு விநியோகம் செய்தனர். இதை அறிந்து சிலர் கடை ஊழியர்களிடம்  ஏன் மூடப்பட்ட கடையை திறந்து மதுபாட்டிலை சிலருக்கு கொடுத்தீர்கள் என விளக்கம் கேட்டு உள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு கடைகள் சீல் வைக்கப்படவில்லை, அதிகாரிகளின் உத்தரவு படி கடை ஊழியர்களான தங்களை சீல் வைத்ததாகவும், அதிகாரிகள் நேரடியாக வந்து கடையை சீல் வைத்தால் நாங்கள் பூட்டுகிறோம் என பொதுமக்களிடம் கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவம் அறிந்து டாஸ்மாக் கடைக்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி  அரசு அடைக்க உத்தரவிட்ட கடையிலிருந்து டாஸ்மாக் மதுபானங்களை யாருக்கும் விற்கக் கூடாது என ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை கூறி மீண்டும் கடையை ஊழியர்களைக் கொண்டு அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.