கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கள்ள நோட்டு மற்றும் போலி முத்திரைத்தாள் அச்சடித்து கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கம்பம்மெட்டு சாலையில் உள்ள 18-ம் கால்வாய் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Gold, Silver Price: 3 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ...!
சோதனையின்போது ஜீப்பில் இருந்த நபர்களில் ஒருவர் தான் பத்திர எழுத்தர் என கூறி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 4 முத்திரை தாள்களை காண்பித்தார். அதை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் முத்திரைத்தாள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
School Leave: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 11 நாள் திடீர் விடுமுறை; என்ன காரணம்?
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மொண்டி எருமை பகுதியை சேர்ந்த பத்திர எழுத்தரான முகமது சியாது (வயது 41), சிரட்ட வேலில் பகுதியை சேர்ந்த பிபின் தோமஸ் (36) என்பதும், கம்பத்தில் ஓடைக்கரைத் தெருவில் கோபிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து அங்கு போலி முத்திரைத்தாள்கள் அச்சடித்ததும் தெரியவந்தது.
ரணகளமான திருச்சி சிவா வீடு... அடித்து நொறுக்கப்பட்ட கார், பைக், நாற்காலி... 10 பேர் கைது? என்ன காரணம்?
இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 போலி முத்திரைத்தாள்கள், 100 ரூபாய் மதிப்புள்ள 3 முத்திரைத்தாள்கள், 500 ரூபாய் நோட்டு பின்புறம் அச்சடிக்கப்பட்ட பேப்பர், அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரம், அச்சடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 538 வெள்ளை பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சியாது, பிபின் தோமஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மற்றும் பிரிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து வந்து கம்பத்தில் முத்திரைத்தாள் அச்சடிக்கப்பட்ட காரணம் என்ன?. போலி முத்திரைத்தாள்கள், கள்ள நோட்டுகள் எத்தனை அச்சடிக்கப்பட்டுள்ளன. அதனை எந்த பகுதியில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகை வீட்டில் தங்கியிருந்து போலி முத்திரைத்தாள், கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.