தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டதில் வைக்கப்பட்ட கோரிக்கைகளாக பக்தர்களின் எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் மேல்மா விவசாயிகள் நிலத்தை சிப்காட் நிறுவனம் எடுக்கப்படுவதை தடுக்கக்கோரி போராடும் விவசாயிகள் மீது வழக்கு போடுவதை நிறுத்த வேண்டுமெனவும்,


"இதுதான் என் அரசியல்" திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? கமல்ஹாசன் பரபர விளக்கம்!




பா.ம.க. ஆர்ப்பாட்டம்:


தேனி மாவட்டம் கம்பம் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ள பகுதிகளில்  குடியிருந்து, பல வருடங்களாக தொழில் செய்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டுமெனவும், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறை கையகப்படுத்தி முறையான மறுஅளவீடு செய்து எல்லை கற்களை நிறுவிட வேண்டுமெனவும்.


Breaking News LIVE: தேசத்தின் நலனை காக்கவே தி.மு.க.வுடன் கூட்டணி - கமல்ஹாசன் விளக்கம்




கம்பம் , சுருளிப்பட்டி சாலையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு கம்பம் பகுதிக்குள் மாற்று இடம் வழங்கிட வேண்டுமெனவும்,20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டுமனவும். தேர்வாணையத்தை விடுத்து அரசுப் பணிகளுக்கு 32 ஆயிரத்து 709 பேர் நேரடியாக தேர்வு செய்ததைக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும்,




Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி


கோரிக்கைகள்:


தமிழகத்தில் அரசு, தனியார் பணிகளில் 80% இட ஒதுக்கீடு வழங்கி 8 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கிடவேண்டுமனவும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 5000/- ஆக உயர்த்திடவேண்டுமெனவும் , அரசு ஊழியர்களுக்கு வழங்கிய பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும், பிற மாநிலங்களைப்போல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்திற்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் இடப்பங்கீடு விரைந்து வழங்க வேண்டுமன  கோரிக்கைக வைத்து தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பாக கம்பம் வ.உ.சி திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட  கம்பம் பாமக நகர நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.