சமீபகாலமாக தமிழகத்தில் சில இடங்களில் பிளாஸ்டிக் முட்டை மற்றும் பிளாஸ்டிக் அரிசி பொதுச் சந்தையில் விற்பனையாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அதே போன்ற சர்ச்சை மீண்டும் உருவெடுத்துள்ளது.  தேனி மாவட்டம் வருசநாடு  பகுதியில். பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



    தேனி மாவட்டம்  வருசநாட்டை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் கோழி முட்டைகள் வாங்கினார். பின்னர் வாங்கிய முட்டைகளை வேகவைத்து செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டனர். இந்தநிலையில் நேற்று காலை சாப்பிடாமல் மீதமிருந்த வேகவைக்கப்பட்ட 2 முட்டைகளை செல்வம் அப்புறப்படுத்த முயன்றார்.அப்போது அந்த முட்டைகள் சற்று வித்தியாசமாக தெரிந்ததால், அதை உடைத்து பார்த்தார். அப்போது அவை வழக்கமான முட்டைகளை விட கடினமாக இருந்தது. மேலும் அந்த முட்டைகளில் எந்தவித வாசனையும் வெளிவரவில்லை. இதனால் அவை பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாமோ? என்று சந்தேகம் அடைந்த செல்வம், முட்டைகளை உடைத்ததை வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பார்த்த ஏராளமானோர், தங்களது மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். 



வைரல் வீடியோ :-


      இதனால் அந்த வீடியோ வைரலாகி, வருசநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுகிறதா என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீபகாலமாக பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக எழுந்த புகார்கள் பீதியை ஏற்படுத்தியது. அந்த வகையில் வருசநாட்டில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக வைரலான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  எழுந்துள்ளது.




உணவு பொருட்களில் கலப்படம் செய்வதால் மனிதரின் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆரோக்கியமற்ற நிலையே உருவாகிறது. இது போன்ற கலப்பட உணவு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தனி கவனம் செலுத்தி இது போன்ற கலப்பட பொருட்கள் வர்த்தக சந்தையில் புழக்கத்தில் இருப்பதை தடுக்க உரிய நடவடிக்க எடுக்க வேண்டுமென்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


பஜ்ஜி பிரியர்களுக்கு பங்கம் வரலாம்... தேனி வாழை ஏற்றுமதியில் பின்னடைவு!