கைலாசநாதர் கோயில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தினர் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதி புறக்கணிக்கப்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டினார். இதற்கு, ஓபிஎஸ் இளைய மகன் அங்கம் வகிக்கும் நண்பர் பணி செய்யும் குழு மறுப்பு தெரிவித்து கோயிலில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளருக்கு மரியாதை செய்த புகைப்படத்துடன் விளக்கம் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


TN Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.. முழு விவரம்..




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றுவதில் திமுக மற்றும் ஓபிஎஸ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கார்த்திகை தீபத்தை கோவில் அர்ச்சகர் ஏற்றினார்.இதனிடையே மகா கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுகவினர் ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட சலசலப்பு ஏற்பட்டது.


விபூதியின் நறுமணம்.. அரோகரா கோஷம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா




இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்காமல் சமூகநீதியை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு கூறிவந்தார். இதற்கு விளக்கம் தெரிவிக்கும் விதமாக ஓபிஎஸ் இளைய மகன் ஜெய பிரதீப் அங்கம் வைக்கும் அன்பர் பணி செய்யும் குழு என்பதை பதிவு செய்து தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதில் பெரியகுளம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தை உள்ளடக்கிய 100க்கும் மேற்பட்டோர் அங்கம் வகிப்பதாகவும்,


World Test Championship: அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்.. இத பண்ணா இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்!



Nirmala sitharaman: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை - நிதியமைச்சர் காட்டம்


அதில் தற்பொழுது செயலாளராக ஒரு பட்டியல் இனத்தவரை சேர்ந்தவரே இறை பணி செய்து வருவதாகவும், கார்த்திகை தீபத்தன்று திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கோவிலில் மரியாதை செய்து அவர்களுக்கும் பரிவட்டம் கட்ட அழைத்த போது அவர்கள் வர மறுத்து  தீபம் ஏற்றும் இடத்திற்கு சென்று விட்டதாகவும் இதில் எந்த சமூக நீதியும் புறக்கணிக்கப்படவில்லை என்று விளக்கம் தெரிவித்து கார்த்திகை தீபத்தன்று திமுக உறுப்பினர்களுக்கு மரியாதை செய்த புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண