மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் நாகரத்தினம் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்பவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
பாலசுப்பிரமணியனின் மகள் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது மகள் நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் 2-வது திருமணம் செய்ய பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரது மகள் நாகரத்தினம் குழந்தை ஆத்விக் இவர்களுடன் மறுமணம் செய்ய இருந்த தமிழ் என்பவரும் சேர்ந்து வந்துள்ளார்.
இதைக்கண்டு ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரது நண்பர்கள் ஆன மகாலிங்கம் , பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று இரவு தெற்கு வாசல் f.f-ரோடு நாடார் வித்யாலயா சாலை அருகே சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிரமணியனை மூவரும் இரும்புராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இரும்பு ராடால் தாக்கியதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்.
பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகன் பிரபாகரனை தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்த நிலையில் பிரபாகரனின் நண்பர்களான பாலகிருஷ்ணன், மகாலிங்கம் மற்றும் இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மறுமணம் செய்ய இருந்த மனைவியால் மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : கோவையில் லாட்டரி விற்றவர் கைது..! 2140 கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்