தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியிருந்து வருபவர் ஓய்வு பெற்ற மருத்துவர் விமலா திருமலை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓ.சண்முகசுந்தரம் என்பவருக்கும் இடையில் இடத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஓ.சண்முகசுந்தரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.


தேனி: சின்னமனூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு


இந்நிலையில், இடப் பிரச்சினை தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் மருத்துவர் விமலாவின் வீடு பலவீனமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே வீட்டை சரிசெய்ய ஆட்களை அனுப்பி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.


Subbulakshmi Jagadeesan Quits : திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.. வெளிவந்த விலகல் கடிதம்..!


இதுபற்றி தகவலறிந்த ஓ.சண்முக சுந்தரம், நேரடியாக சென்று விமலா திருமலை உடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தகராறு முற்றி கொலை மிரட்டல் விடுத்ததாக ஓ.சண்முகசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தென்கரை காவல்நிலையத்தில் விமலா புகார் ஒன்றை அளித்துள்ளார்.




இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.சண்முகசுந்திரத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்கரை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை கிடைத்துள்ளது. அதில் விமலா என்பவர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர். இவரது வீட்டின் அருகே ஓ.சண்முகசுந்தரத்திற்கு காலியிடம் உள்ளது.


"ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..

இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் சுவற்றின் அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததால் வேலைக்கு ஆட்களை வரச் சொல்லியிருக்கிறார். பின்னர் வேலை செய்ய ஏற்பாடுகள் நடந்தன.




Yogi Adityanath Temple : ”யூ ட்யூபில் பணம் வருது” : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டிய நபர் பேட்டி


அப்போது ஓ.சண்முகசுந்தரம் வந்து வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளார். பெண் என்றும் பாராமல் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 294(b), 506(i) IPC 4 of TNPHW Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.