கடன் பிரச்னை:


தேனி மாவட்டம் சின்னமனூர் சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் செவத்திவீரன். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாகவும் , கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதாகும் இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தனியார்  நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தையால் மிரட்டி சென்றதாகவும்,




தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் தற்கொலை:


தொடர்ந்து நேற்று இரவு  தனியார்  நிறுவன ஊழியர்கள் மீண்டும் வந்து இரவு நேரத்த்தில் தகாத வார்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, செவத்திவீரன், அவரின் மனைவி ஒச்சம்மாள் 45 மற்றும் மகன் ராஜேஷ் 31 ஆகிய மூன்று பேரும் தொடர்ந்து மிரட்டி வரும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பயந்து விஷ மருந்து அருந்தி தற்கொலை செய்துள்ளனர். காலையில் வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்காமல் இருந்ததால் அருகில் உள்ள வீட்டார்கள் கதவை திறந்து பார்த்தனர்.  அப்போது மூவரும் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ந்து போய் சின்னமனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு மருந்து பாட்டில்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக  சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




தற்கொலை குறித்து விசாரணை:


தொடர்ந்து மூன்று பேர் இறப்பு குறித்து சின்னமனூர்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட செவத்திவீரன் அரசு மது பானகடை பாரில் சமையல் வேலை செய்து வருவதாகவும் மனைவி ஒச்சம்மாள் சின்னமனூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி மேற்கொண்டு வருவதாகவும் மகன் ராஜேஷ் தனியார் நகை அடகு கடையில் வேலை செய்து வருவதாக தெரியவருகிறது . மேலும்  தனியார்  நிறுவன ஊழியர்களின் மிரட்டலால் தான் செவத்திவீரன் குடும்பத்தார்கள்  தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியில் கூறி வருகின்றனர். கடன் பிரச்சனை கரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)