போக்சோ வழக்கு:


திருமண ஆசை வார்த்தை கூறி  சிறுமியை குழந்தை திருமணம் முடித்து பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிவுகளின் அடிப்படையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Latest Gold Silver Rate: வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு..




தேனி மாவட்டம் போடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 43). இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் முடித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் 2020 ஆம் ஆண்டு சிறுமியை காணவில்லை என  போடி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடிய பொழுது கிருஷ்ணன் திருமணம் முடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட போடி நகர் காவல் துறையினர்  குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்




 நீதிமன்றம் தீர்ப்பு :


இந்த வழக்கு விசாரணையானது  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவுற்று கிருஷ்ணன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளி கிருஷ்ணனுக்கு IPC 366 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அதைக் கட்டத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்ததோடு மேலும் 2019 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்தச் சட்டம் (போக் ஷோ) பிரிவு 4(2) ன் அடிப்படையில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


5 Years Of Super Deluxe : புனிதங்களை எல்லாம் நொறுக்கினார் குமாரராஜா.. 5 ஆண்டுகளை கடந்த சூப்பர் டீலக்ஸ்




பத்தாயிரம் ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கடும் காவல் சிறை தண்டனையும், 2006 குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 9ன் கீழ் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என மூன்று பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு  தண்டனை காலத்தை  குற்றவாளி ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளி கிருஷ்ணனை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.