தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று  இரட்டை மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடந்தது. 




தேனி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் சின்னமனூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் தேன்சிட்டு, புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகள் பங்கேற்றனர்.


Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு




இன்று நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை தேனி தெற்கு மாவட்ட கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் எம் எல் ஏ, தேனி தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வசந்தன், சின்னமனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கொடியை செய்து துவக்கி வைத்தனர்.


HBD Sivakarthikeyan: 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி! குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று!




40 years of Vijay: குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!


சின்ன ஓவுலாபுரம் முதல் எரசக்கநாயக்கனூர் ,  சின்னமனூர் சாலையில் உள்ள ஹை ஸ்கூல் வரையிலான 8 கி.மீ தூர எல்கையை முதலில் சென்றடைந்து வரும் ஜோடி மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் முதலில் கொடி எடுத்து வரும் மாட்டு வண்டிகள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இரு புறமும் நின்றிருந்த பொதுமக்கள், இளைஞர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.