தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை பரவலாக பெய்து வந்த நிலைில், தென்மாவட்டங்களான விருதுநகர், மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலும் அதிகனமழை பெய்து வருகிறது.தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


Omni Bus Service: வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள் - ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..




இந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் ஆறுகள், குளங்கள், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோபோல் தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழையின் காரணமாக கொட்டகுடி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கெட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


IND vs SA: 200 பந்துகள் மீதம் வைத்து மாபெரும் வெற்றி! இந்திய அணி படைத்த 5 சாதனைகள்!




மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி  மலைப்பகுதியில் உருவாகும் கொட்டகுடி ஆறு வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று. வட கிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரை புரண்டு  ஓடுகிறது. பகல் நேரத்தில் குறைந்த வெள்ளமாகவும் மாலையில் இருந்து இரவு நேரங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.


Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - தற்போதைய நிலவரம் என்ன?


இதன் காரணமாக கெட்டக்குடி ஆற்றின் கரை பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் விவசாய நிலம் வைத்திருக்கும் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் விவசாய நிலங்களுக்கு கடந்து செல்ல முயற்சிக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மாலை 4 மணி அளவில் துவங்கிய கனமழை விடிய விடிய தொடர்ந்து 16 மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது . இதனால் கொட்டகுடி ஆறு பிச்சாங்கரை ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார் அணையில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.