தமிழ்நாடு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


இன்றைய காலகட்டத்தில் படித்த கல்விக்கேற்ற வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லை என்ற நிலை ஒரு பக்கம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு பக்கம் தொழில் முனைவோர்களும் தங்களுடைய சொந்த முயற்சியில் ஆங்காங்கே உருவாகி வருகிறார்கள் என்பதை பார்க்க முடியும். அந்த வகையில் அரசுகளும் தொழில் முனைவோர்களை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர்கான வங்கிக்கடன், தொழில்கள் உருவாக்குதல் என பல்வேறு சலுகைகளுடன் கூடிய பல்வேறு வாய்ப்புகளை அரசுகள் செய்து தருகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சலுகைகளை செய்து தருகிறது மத்திய, மாநில அரசுகள்.


’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், சிறு தொழில் முனைவோராக மாற்றும் வகையில் தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது.


Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்




இந்த பயிற்சி வகுப்பில் தேங்காய் ஓட்டில் இருந்து  சமையல் கரண்டி, சாவிக் கொத்து, வீட்டின் அலங்காரப் பொருட்கள், செல்போன் ஸ்டாண்ட் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி,  கைவினைப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு கைவினைப் பொருட்கள் கலைஞர்கள் செய்முறை பயிற்சி கொடுத்து வருகின்றனர்.


Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியில் குழந்தை யோகம் யாருக்கு ? இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம்..!


இந்த பயிற்சி வகுப்பை அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம், தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் முனைவர் சோமசுந்தரம்  மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு  மாற்றுத்திறனாளிகள்  கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டால் வருவாய் ஈட்டி வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர். இந்த பயிற்சி வகுப்பில் தேனி மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.