சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.


ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை




கேரளாவில் மிகவும் பிரிசித்திபெற்ற உலகப்புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு மண்டல பூஜைக்கும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை  நேற்று 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் ஐயப்ப தேஸ்சம்போர்டு கடைபிடிக்கப்பட்டு விதிமுறைகள் தற்போது நடைமுறையில்  உள்ளன. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய தங்களது விரதத்தை தொடங்கினர்.


Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?




அப்படி ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் கேரள போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 நிமிட சுழற்சி அடிப்படையில் இந்த போலீஸார் பணி மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் கடந்த காலங்களில் 18ம் படிகளில் ஏற்பட்ட நெரிசல் தற்போது வெகுவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் மேற்கொள்வதற்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்




இதன்படி இவர்கள் 18ம் படி ஏறியவுடன் மேல் தள இரும்புப் பாலம் வழியாக சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரிடையாக தரிசனத்துக்குச் செல்லலாம். இவர்களுடன் உதவிக்கு கூடுதலாக ஒருவர் செல்லலாம். இந்த வசதியினால் முதியவர்களும், குழந்தைகளும் சிரமமின்றி குறைவான நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து தேவசம்போர்டு சார்பில் கூறுகையில், பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்களில் 18ம் படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்தானம் முன்பு செல்லலாம். தற்போது நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியோர் மற்றும் குழந்தைகள் மட்டும் இப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இரும்பு மேம்பாலம் வழியே சன்னிதானத்தின் பின் பகுதி, பக்கவாட்டு பகுதிகளின் வழியே சென்று மீண்டும் மூலஸ்தான பாதை மூலம் தரிசனம் செய்யலாம் என்றனர்.