Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (19.11.2024) நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.      


 

மின் பாதை பராமரிப்பு பணி        


                                                                           

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி (நவம்-19) நாளை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்.

 


மின்தடை ஏற்படும் பகுதிகள்


 

பேரையூர் நகர் பகுதி, சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, P.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பராப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர் நகர் பகுதி, பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்பதை தெரிவிக்கிப்பட்டுள்ளது.

 

அதே போல் சமயநல்லூர் பகுதி செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்


 

சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான். மேலமட்டையான். நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் சோழவந்தான் நுணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் நாளை நவ-19 மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


 

அதே போல் மதுரையில் பிற பகுதிகள்




 







பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 முதல் 7 வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புதிய விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர்,பாத்திமா கல்லுாரி, அக்கல்லுாரியின் எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி, லட்சுமிபுரம்.

 

பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.

 

அவனியாபுரம் பைபாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணிரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தா புரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசித்தோட்டம், பெரியரதவீதி குடியிருப்பு பகுதி, பாம்பன் நகர், பாப்பாக்குடி, டிமார்ட், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலாநகர், போலீசார் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதியில் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.