தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை காட்டி கூட்டிச் சென்று திருமணம் செய்த இளைஞரை கைது செய்து, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிவசங்கர் (வயது 22). இந்த இளைஞர் குடியிருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சிவசங்கர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் முடித்துள்ளார்.
செங்கோட்டை நகர்மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - தப்பியது பதவி
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து சிறுமியை தேடி வந்த நிலையில் சிவசங்கர் திருமணம் முடித்து தேனி அருகே உள்ள அன்னஞ்ஜி பகுதியில் தங்கி இருந்த நிலையில், நேற்று சிறுமியை மீட்டதோடு இளைஞர் சிவசங்கரை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று குழந்தை திருமணம் முடித்துள்ளது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இளைஞர் மீது குழந்தை திருமணச் தடைச சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் தேனி மாவட்ட தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.