முன்னாள் மாணவர் சந்திப்பு:
கடந்த 1973-74 ஆண்டு பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தனியார் மண்டபத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு :
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 1973-74 ஆம் ஆண்டு பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்ச்சி பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் , மாணவர்களும் பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் தாங்கள் பயின்ற ஆசிரியர்கள் பணிபுரிந்த பள்ளியின் முன்பு நின்று 50 எடுத்த ஆண்டுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து மாணவர்கள் ஒரே போல சீருடை அணிந்து புகைப்படம் எடுத்தனர்.
ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு:
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு அருந்தி அதற்குப் பின்பாக, நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்கும் விதத்தில் முன்னாள் மாணவர் ஆர்.விஜயகுமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கவுரவிக்கும் விதத்தில் நினைவு பரிசுகளும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்று கௌரவித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் அத்தனை மாணவர்களுக்கும் நல்லாசி வழங்குவதோடு 50 ஆண்டுகள் கடந்தாலும் தங்களுடைய மாணவர்களை மாணவர்களாகவே ஆசிரியர்கள் பாவித்ததும் அதேபோல அன்று ஆசிரியரிடம் மாணவர்கள் மரியாதை மற்றும் நல்லொழுக்கத்துடன் நடந்து கொண்டார்களோ அதே ஒழுக்கத்தையும் மரியாதையையும் மாணவர்களும் கடைப்பிடித்தனர்.
பயின்ற பள்ளிக்கு உதவி :
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல பல அறிவுரைகள் கூறியது மட்டுமல்லாது, அதே அனுபவத்தோடு மாணவர்களும் நிகழ்ச்சியில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மீண்டும் மதிய உணவு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிக்கு தற்போது உள்ள தலைமை ஆசிரியர் கோபிநாத் அவர்களை வரவழைத்து அவரை கௌரவித்து பள்ளிக்கு தேவையான சிசிடிவி கேமரா ஆவணங்களை பாதுகாப்பதற்கு பீரோ அதே போல பள்ளியின் வளாகத்தில் நடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் என மாணவர்களால் எவ்வளவு அந்தப் பள்ளிக்கு நன்கொடை வழங்க முடியுமோ அத்தனையும் மொத்தமாகவும் தனிப்பட்ட நபர்கள் விருப்பத்திற்கு தங்களது பள்ளிக்கு அள்ளி வழங்கினர்.
பிரியா விடை பெற்ற மாணவர்கள் :
இதனைத் தொடர்ந்து இறுதியாக நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கண்ணீர் மல்க தங்களது பிரியா விடை கூறி பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். இந்த நிகழ்வு பெரியகுளம் பகுதியில் பார்ப்போரை அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியோடு அனைவரது மனதையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இனிவரும் காலங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக இணைந்து நல்ல பல காரியங்களை இந்த சமூகத்திற்கு செய்திட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.