தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கொண்டல்நகரை சேர்ந்தவர் காளிமுத்து என்ற மாரிமுத்து (67). இவருடைய மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (33). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்த 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். பின்னர் அந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.


NEET UG 2023: இதுவரை இல்லாத அளவு; நீட் தேர்வுக்கு 21லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்- தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?



இதையறிந்த அவருடைய தந்தை காளிமுத்து, தாய் பேபியம்மாள் (68) ஆகியோரும் அதற்கு துணை போனார்கள். மாணவியை சுரேஷ்குமார் தனது பெற்றோருடன் சேர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காரில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே போத்தன்கூடு பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த திருமணத்துக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஜெயா (35), அவரது கணவர் சோமன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.


TN Weather Update: கத்திரி வெயிலே இன்னும் ஆரம்பிக்கல, அதுக்குள்ள இப்படியா? 15 மாவட்டங்களில் சதம் அடித்த வெப்பநிலை.. இன்றைய அப்டேட் இதோ..



பின்னர் ஜெயாவின் வீட்டில் வைத்து மாணவியை, சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி மாயமானதாக கூறி அவருடைய தாய் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமார் மாணவியை கடத்திச் சென்று, திருமணம் முடித்ததுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.


திருவண்ணாமலையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம்



இதையடுத்து காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள், ஜெயா, சோமன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜராகி வாதாடினார்.


Crime: வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி; மகன் செய்த சேட்டையால் மாட்டிக் கொண்ட தந்தை


வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பளித்தார். அதில் இந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் தலா 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஜெயா, சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும்  நீதிமன்றத்தில் இருந்து, போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண