தமிழக, கேரள எல்லை இரு மாநிலத்தை இணைக்கும் எல்லை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


தேனி மாவட்டம் கம்பம், சீலையம்பட்டி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவில் சீசன் , காருத்திகை விரதம் மற்றும் சுப விசேச தினங்களையொட்டி பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலையேற்றம் உச்சம் தொட்டுள்ளது.



தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிபட்டி, பூமலைக்குண்டு, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.



இதில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் பூக்கள் கம்பம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். பரவலாக கேரள மாநிலத்திற்கு கம்பம் பகுதியில் இருந்தே பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஆண்டிபட்டியிலும் உள்ள பூ மார்க்கெட்டிலிருந்து போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு பூக்கள் ஏற்றுமதியும் உள்ளது. இதர மாவட்டங்களுக்கு செல்லவும் பூக்கள் ஏற்றுமதியாகி வருகிறது. இன்று ஆண்டிபட்டியில் விற்கப்படும் பூக்களின் விலைகளில் மல்லிகை பூவின் விலையானது கிலோவிற்கு 3500 ருபாய் வரையில் விற்பனையாகியுள்ளது. ஒரே நாளில் மல்லிகை பூ உட்பட இதர பூக்களின் விலை உச்சம் தொட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




அதே போல் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிலும் மல்லிகை பூவின் விலை இன்று ஒரே நாளில் கிலோவிற்கு 2 ஆயிரம்  ருபாய் வரையில் விற்பனையானது. கார்த்திகை மாத விரதங்கள் மற்றும் மார்கழி மாத கோவில்கள் விசேச நாட்கள் வரவிருப்பதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர