இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வு 05.12.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Telangana Election 2023: தெலங்கானாவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு.. வாக்கு செலுத்த முனைப்பு காட்டு மக்கள்



காலிப்பணியிடம்:


தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட  இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பளர் பதவிகளுக்கான மொத்தம் 3359 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு 10.12.2023. அன்று தேர்வு நடைபெற உள்ளது.  இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு 01.09.2023 முதல் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றது. 


TNPSC Group 2 Result: குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான சூப்பர் தகவல்



இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோர் பயன்பெறும் நோக்கில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட  இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வு 05.12.2023 அன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. 


'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா?' - வானதி சீனிவாசன் கண்டனம்


இத்தேர்வில் பங்குபெற விரும்புபவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் (Hall Ticket Xerox) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (Passport Size Photo) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த முழுமாதிரி தேர்வில் பங்குபெற விருப்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661 மற்றும் 97153 26379 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, இத்தேர்வில் பங்குபெறலாம் என  தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.