தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள் மலைச்சாலைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அறிவுரை வழங்கினார்.


மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரை


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.  கனமழை காரணமாக குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு போடிமெட்டு, மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மரம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவ்வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.  பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்


மழை பாதிப்பு குறித்து தேனிஆட்சியர் ஆய்வு


தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையில், தொடர் கன மழையால் பாறைகள் சரிந்து விழந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீராக உள்ளதா என்பது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் வைக்குமாறு  நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  முந்தல் காவல்துறை சோதனை சாவடியில், போடிமெட்டு மற்றும் மூணார் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள அறிவுரை வழங்குமாறு, காவல்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 


Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!


போடி மீனாட்சிபுரத்தில் உள்ள கண்மாயில், மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பாடத வண்ணம் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  நேரில்  பார்வையிட்டார்.  அதனைத் தொடர்ந்து, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பகுதியில்  முல்லை-பெரியாற்று பாலம், வரட்டாறு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பின்னர்,  தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுருளி அருவிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  




கனமழை மற்றும் திடீரென வெள்ளம் ஏற்பட கூடிய இடங்கள் குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் இருப்பு வைத்திட வேண்டும் எனவும், மழை பாதிப்புகளை குறைத்து,  பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு, அனைத்துத்துறை அலுவலர்களும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சமூக நலத்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.