தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. நான்காவது நாளாக பெய்த மிதமான மழையால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு இறுதியில் 20 ஆம் தேதிக்கு பின் கடந்த 14 நாட்களாக மழை பொழிவு இல்லாது போனது. இந்நிலையில் வருடத்தின் முதல் நாள் முதல் மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.


Lakshadweep Vs Maldives: லட்சத்தீவு Vs மாலத்தீவு : சுற்றுலாவிற்கு எது சிறந்தது? எங்கு என்ன ஸ்பெஷல்?




இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை முதல் காலை வரை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. எனவே நான்காவது நாளாக இன்றும்  காலை முதல் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள  பகுதிகளில்  லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது.


Vadakkupatti Ramasamy: 2024-ல் சந்தானத்தின் முதல் படம்.. ரிலீஸ் தேதியை அறிவித்தது “வடக்குப்பட்டி ராமசாமி” படக்குழு


இதன் எதிரொலியாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.


Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான் - விட்டுக்கொடுக்காமல் பேசும் மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்!




மேலும்,  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு  நடுவில் இந்த அருவி அமைந்துள்ளது.




நேற்று நள்ளிரவில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி  இன்று  சுற்றுலா பயணிகள்  அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.