தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கினாலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவலானது இன்னுமும் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் நிபா என்ற புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸானது வவ்வால்கள் மூலம் பரவும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவூர் என்ற இடத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, சமீபத்தில் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.




தற்போது கேரள மாநிலத்திற்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதிக அளவில் ஏல தோட்டத் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து தேனி மாவட்ட பகுதிகளான தேவாரம், கம்பம், போடி , உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோட்ட தொழிலாளர்கள் ஏலமலை வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு நிபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் சுகாதார துறை சார்பாக அதிக கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு போன்ற தமிழக கேரள மலைப்பகுதி எல்லையில் வருவாய்த்துறை அந்தப் பகுதி நகராட்சி ஊழியகள் மற்றும் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேரள மாநிலத்தில் இருந்து வருவோருக்கு சோதனைகள் செய்யப்பட்ட பின்னே தமிழகத்திற்கு அனுமதிக்கின்றனர் அதே போல தான் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வோரின் நிலையும். குமுளி எல்லையில் கூடலூர் நகராட்சி சார்பாக பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.




இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கையில், " நகராட்சி சார்பில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளி ஊர்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவிலான மக்கள் வருவதால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வருவாய்த் துறையினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் காய்ச்சல் குறித்த பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.


 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுழைவு வாயிலில் உள்ள காவல் நிலைய சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது


 


Theni | 120கிமீ வேகம்.. புழுதிப்பறக்க பறந்த ரயில்.. தேனி டூ ஆண்டிப்பட்டி ரயில் எஞ்சின் சோதனை!


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X