ABP NEWS IMACT


தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளை நிரப்புவதற்கான தேர்தலில் திமுக சார்பில் ராஜேஷ்குமார், தஞ்சை கல்யாணசுந்தரம், கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில்  திமுக மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தேர்தலில் அவருடைய பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால், தங்கத் தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது.


ABP Exclusive: எம்.பி., தேர்வால் ஒரு ஊராட்சி ஒன்றியத்தை இழக்கும் அதிமுக... திமுகவை குதுகலத்தூர் ஆக்குமா முதுகுளத்தூர்!




அதே நேரத்தில் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் கம்பம் ராமகிருஸ்ணன் தங்கதமிழ்செல்வனுக்குமிடையே மாவட்ட செயலாளர் பதவியை ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி ஒருவர் கையில் கைப்பற்ற போட்டி நிலவுவதாகவும் ABP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தேனியில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேனி மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் கிராமம் வழியாக செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறையே  முழுமையாக எடுத்து கொண்டு அந்தச் சாலையைச் சீர் செய்து தர வேண்டும்.‌ ஆதிபட்டி கிராமம் வழியாக செல்லும் புதிய புறவழிச்சாலையில் பூதிப்புரம் கிராம மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது.


தேனி : திமுக உட்கட்சி தேர்தல்: தேனி மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு?


எனவே பூதிப்புரம் கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புறவழிச்சாலையை இணைக்கும் விதமாக இணைப்புச் சாலை ஒன்றை அமைக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். என பேசிய பின்பு என்னைப்  பற்றி சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் அதிகப் பார்வையாளரை பெறுகிறது. இதில் சிலர் நான் ராஜ்ய சபா எம்.பி.யாகப் போகிறேன் எனக் கூறி வந்தார்கள்.இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் நான் புகார் அளித்துள்ளேன். அந்தப் புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.


சட்டு.. சட்டுனு வேலை முடியணும்.. வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு.. ஆட்சியர்களுக்கு அமைச்சரின் அதிரடி உத்தரவு!




தேனி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்ற ஊகத்துக்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது. தேனியைப் பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறோம்.  அதனால் எங்களுக்குள் வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண