தமிழகம், கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழையின்மையாலும் அணையில் நீர் வரத்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே உள்ளது.
அதேபோல, தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதற்கிடையே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, சிவகாசி உட்பட்ட பகுதிகளுக்கு முதல் போக பாசன விவசாயத்திற்கு தண்னீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தற்போது முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பும் குறைந்துள்ளதால் வைகை அணைக்கு வரும் நீர் வரத்தானதும் குறைந்துள்ளது.
MR Radha : பகுத்தறிவு பிரச்சாரகர்.. பல்துறை வித்தகர்.. எம்.ஆர்.ராதாவின் 45-வது நினைவு நாள் இன்று
இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 131.65 அடியாக இருந்தது. மழையின்மையால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கன அடியாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 65.06 (71)அடிகொள்ளளவு:4644Mcftநீர்வரத்து: 121கனஅடிவெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft
மஞ்சலார் அணை:நிலை- 43(57) அடிகொள்ளளவு:226.05Mcftவரத்து: 7 கனஅடிவெளியேற்றம்: 65 கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை- 114.80 (126.28) அடிகொள்ளளவு: 81.41Mcftநீர்வரத்து: 12.90கனஅடிவெளியேற்றம்: 25கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-32 (52.55)அடிகொள்ளளவு:27.07 Mcftவரத்து: 0 கனஅடிவெளியேற்றம்: 14.47கியூசெக்.