செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீர்பாட்டில் ஏற்றுச்சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து அள்ளிச் சென்ற மது பிரியர்கள்
பள்ளத்தில் சரிந்த பீர் பாட்டில்கள்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி பாக்கம் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓர இடது புற பள்ளத்தில் கவிழ்ந்து.
இதனால் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழியர்கள் தேடி சென்று
மேலும் பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானது, அறிந்து சுற்று வட்டார மது பிரியர்கள் பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். சில பேர் பாட்டில்களை வயலில் பதுக்கிவைத்தனர். இதனை ஊழியர்கள் தேடி சென்று எடுத்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பலரும் பீரை எடுத்துச் செல்ல ஆர்வமுடன், அப்பகுதியில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு. எனவே அப்பகுதியில் ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மறைத்து வைத்த பீர் பாட்டில்களை தேடி கண்டுபிடித்து சேகரித்து வருகின்றனர்.
தொடரும் விபத்துக்கள்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வார இறுதி நாட்களில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்பதும் , திங்கட்கிழமை உள்ளிட்ட நாட்களில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்படும் தொடர் கதை ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவப்பொழுது ஏற்படும் விபத்துகளில் உயிர் சேதமும் ஏற்படுவதால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கார் ஒன்று கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் முதல் மதுராந்தகம் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.