தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகைமலை ஊராட்சி கிராம பஞ்சாயத்து உள்ளது.  இந்த ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கண்ணகரை, குறவன் குழி, கருங்கல்பாறை, பட்டூர், படப்பம்பூர், சொக்கநிலை, சின்ன மூங்கில், பெரிய மூங்கில், கரும்பாறை, உள்ளிட்ட 14  மலை கிராமங்கள் உள்ள நிலையில், இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் தேனி மாவட்ட வனத்துறையினர் மலைவாழ் மக்களுக்கு வெளியேற்றக் கோரி அரசு சார்பாக ஒவ்வொரு மலை கிராமமாக சென்று நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


Ramanathapuram Collector: ராமநாதபுரம் ஆட்சியரை தள்ளிவிட்ட விவகாரம்; திமுக எம்.பி நவாஸ் கானின் உதவியாளர் கைது..!




இதனால் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு, மலைப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விற்பதோடு, மலைப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் தங்களை நாடு கடத்துங்கள், அல்லது அனைவரையும் சுட்டுக் கொள்ளுங்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தனர்.மேலும்  வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அறிவிப்பானை கொடுத்து  வெளியேற்றும் நோக்கத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றது என மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். 


அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?




EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்


அதனைத்தொடர்ந்து அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட 14 மலை கிராம மக்களின் ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைப்பகுதியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கையை கைவிடாவிட்டால் மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போடி வட்டாசியர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டமும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் அதற்கு தீர்வு காணாவிட்டால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு ஆவணங்களான ரேஷன் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர் மலை கிராம மக்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண