தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் தேவதானப்பட்டி காவல் நிலைய சோதனைச் சாவடியில்  வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது,  மதுரை பதிவு கொண்ட  காரில் சோதனை இட்ட பொழுது  நான்கரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

Continues below advertisement

ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது" - கனிமொழி சோமு

Continues below advertisement

இதனை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட இதுவரையில் எட்டு நபர்களை கைது செய்துள்ள நிலையில் கஞ்சா மொத்த விற்பனையாளரை கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் போதை தடுப்பு தனிப்படை பிரிவினர் விசாரணை மேற்கொண்டதில் ஒடிசா மாநிலம் பெருகாம்பூர் பகுதியைச் சேர்ந்த  மானல் சபாநாயக் (22) என்பவருக்கு G PAY மூலமாக பணம் செலுத்தும் நபருக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலத்திற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் மானல் சபாநாயக்  என்ற இளைஞரை கைது செய்து  தேவதானப்பட்டி  காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மாநகராட்சியுடன் இணைத்தால் பாதிப்பு ஏற்படும்... ராமநாதபுரம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு

இதனைத் தொடர்ந்து  தேவதானப்பட்டி காவல்துறையினர் ஓடிஸா மாநிலத்தில் இருந்து கைது செய்து வரப்பட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி  சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து  பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு கூறுகையில், கஞ்சா விற்பனையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதால் கஞ்சா மொத்தமாக சப்ளை செய்யும் நபர்களையும் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதால்  தற்பொழுது,

ABP Southern Rising Summit 2024: "தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி

வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு அவர்களின் வங்கிக் கணக்கையும் முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜதுரை மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு நபர்களையும் தனிப்படையினர்  தேடி வருகின்றனர்.