போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டணை தேனி நீதிமன்றம் தீர்ப்பு
தேனி மாவட்டம், தேனி உட்கோட்டம் தேனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முதல் தெரு, வள்ளுவர் காலனி, கருவேல்நாயக்கன்பட்டியில் வசிக்கும் முருகன் 49/19, த.பெ. கருப்பையா என்பவர் தேனி காவல்நிலையத்தில் தனது 15 வயது மகளை காணவில்லை என்று கொடுத்த புகாரின்பேரில் தேனி காவல்நிலைய குற்ற எண்: 182/2019 U/s. Girl Missing வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.’
விசாரணைக்கு பிறகு வழக்கின் மாற்றம் செய்யப்பட்டு எதிரி அஜித் 21/24, த.பெ. சேகர், கிழக்குத்தெரு, வீபாண்டி என்பவர் வாதியின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டது தெரியவந்ததால் தேனி காவல்நிலைய குற்ற எண்: 182/2019 U/s. Girl Missing @ 363 IPC @ 366 IPC, 5(J) (ii) 6 Of POCSO Act 10.10.2019 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கின் இறுதியறிக்கை 06.11.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி எதிரி அஜித் (21) என்பவரை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி V.கணேசன், B.A.BL. LLB., அவர்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு எதிரிக்கு 366 IPC-ன்கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டணையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம் கட்டத்தவறினால் ஒரு ஆண்டு மெய்காவல் தண்டணையும், மேலும் 2012 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் பிரிவு 5(1)(ii) 2/இன் கீழான குற்றத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல்தண்டணையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம்கட்டத்தவறினால் ஒரு ஆண்டு மெய்காவல் தண்டணையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் மெட்டுரோடு சிலுவை கோயில் அருகே கஞ்சா கொண்டு செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சின்னன் (30). த.பெ. முருகன், வார்டு 7 அன்னக்கொடி தெரு, வருசநாடு, ஆண்டிபட்டி என்பவரை சோதனை மேற்கொண்டபோது அவரிடம் இருந்து 10.250 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர் மீது கம்பம் வடக்கு காவல் நிலைய கு.எண். 321/2018 பிரிவு 8(C) r/w 20 (b), (II), (B) NDPS Act 60 I வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் இறுதியறிக்கை கடந்த 16.09.2018 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 25.04.2024ம் தேதி மேற்படி குற்றவாளி சின்னன் (30), த.பெ. முருகன், வார்டு 7 அன்னக்கொடி தெரு, வருசநாடு, ஆண்டிபட்டி என்பவரை மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி திரு.A.S.ஹரிஹரகுமார், B.L, அவர்களால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு குற்றவாளி 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூபாய் 25,000/- அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 1 வருட மெய்காவல் சிறை தண்டணையும், விதித்து தீர்ப்பளித்தார்.