தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். இரு மாநிலங்களின் எல்லையான தேனி மாவட்டத்தில் கேரள மாநிலத்தவர்கள் வர்த்தக மற்றும் வணிக ரீதியான போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.


T20 World Cup 2022: இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இவங்கதான் கலக்கப்போறாங்க.. ஐசிசி வெளியிட்ட லிஸ்ட்...




கேரளாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விசேஷ நாட்கள் மற்றும் விழா காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தேனி மாவட்டத்தில் உள்ள எல்லையோர பகுதிகளான கம்பம், போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.


DGP Murder : கெச்சப் பாட்டிலால் கழுத்தறுப்பு.. தீக்காயங்கள்.. கொடூரமாக கொல்லப்பட்ட ஜம்மு& காஷ்மீர் சிறை டிஜிபி.. அச்சத்தில் உறைந்த காவல்துறை..


இந்த நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளான கம்பம் மார்க்கெட், போடி மார்க்கெட், தேனி முக்கிய கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ,விஜயதசமி மற்றும் தொடர் விசேஷ நாட்களின் எதிரொலியாலும் இன்று அதிக அளவில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதை காண முடிந்தது . சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜையில் இடம் பெறும் பொரி, கடலை, வெல்லம், பூக்கள், வாழை மரக்கன்று போன்றவை விற்பனை மும்முரமாக இருந்தது.


MBBS, BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ்: கலந்தாய்வு, வகுப்புகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு.. இதை செக் பண்ணுங்க..


மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருந்தன. ஆயுதபூஜையையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான அலங்கார பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்துவிட்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். இதனால், பூசணிக்காய் விற்பனையும் களை கட்டியது.




பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிக அளவில் வந்ததால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர