ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தச் சூழலில் அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் சடலமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். 


ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் தன்னுடைய நண்பர் ராஜீவ் குமார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் இவர் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் நேற்று காலை அவருடைய கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடன் தங்கியிருந்த வீட்டு வேலை செய்த யாசிர் அஹமெத் நபர் வீட்டிலிருந்து தப்பியுள்ளார் என்னும் நிலையில் அவரே இக்கொலையில் சந்தேகிக்கப்படுகிறார்.






டிஜிபி ஹேமந்த் குமாரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிய ஓடிய வேலைக்காரர் யாசிரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிஜிபி ஹேமந்த் குமாரை பணியாளர் யாசிர் கொலை செய்து இருக்காலம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் முதலில் அவருடைய உடலில் மூச்ச திணறவைத்து கொலை செயத்தாக தெரிகிறது. அதன்பின்னர் அவருடைய கழுத்தில் கெச்சப் பாட்டிலை உடைத்து அறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் டிஜிபியின் உடலில் சில தீக்காயங்களும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் குமார் லோஹியா ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நீண்ட நாட்களாக பணியில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறைத்துறை டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில் இவருடைய திடீர் கொலை காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






நேற்று முன் தினம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சுடு சம்பவத்தில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் காஷ்மீர் சுற்றுப்பயணம் செய்து சில முக்கிய திட்டங்களை திறந்து வைக்க உள்ளார். இந்தச் சூழலில் அவர் காஷ்மீர் செல்வதற்கு முன்பாக தீவிரவாத தாக்குதல் மற்றும் காவல்துறை டிஜிபி கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எனினும், இதுவரை இதில் தீவிரவாதிகளுக்கான தொடர்பு என எதுவும் உறுதிசெய்யப்படவில்லை