தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினருக்கு சொந்தமான வீடு, இடம், கார் மற்றும் இரு சக்கர வாகனம் என ரூபாய் 59 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளையும் முடக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களின் சொத்துகள் மற்றும் அவர்களின் தங்கை மற்றும் பாட்டி சொத்துகளையும் தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் கங்கா தேவா என்பவர் பல்வேறு கஞ்சா வழக்குகள் இவர் மீது பதியப்பட்ட நிலையில் இவரின் அனைத்து சொத்துகளையும் காவல்துறை தற்போது முடக்கியுள்ளது.
பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள கங்காதேவாவின் 41 லட்சம் மதிப்பிலான வீடு, 6 லட்சம் மதிப்பிலான போலிரோ கார், 1 லட்சம் மதிப்பிலான இரு இருசக்கர வாகனங்கள், கங்காதேவாவின் சகோதரியான வெண்ணிலாவிற்கு சொந்தமான 6 லட்சம் மதிப்பிலான இடம் , கங்காதேவாவின் உறவினர்களுக்கு சொந்தமான என மொத்தம் 54 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதே போல கைலாசபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மற்றொரு குற்றவாளியான பிரபாகரன் என்பவரின் பாட்டியான திருமூலம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.50 லட்சம் மதிப்பிலான இடத்தையும் தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்த இரண்டு கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 59 லட்சம் மதிப்பிலான சொத்துகளை தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர். முன்னதாக ஒடைபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரின் வங்கி கணக்கையும், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான 23 லட்சம் மதிப்பிலான வீட்டை காவல்துறையினர் முடக்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு இதுவரை தேனி மாவட்டத்தில் 169 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 484 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்ட நிலையில் ,278 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர்- இவர்களின் 34 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில அடைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்