கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தமிழக, கேரள எல்லையில் பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.


TN School Reopening: குறையாத வெயில் தாக்கம்; பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா? முழு விவரம்.




கடந்த 27-ந்தேதி அந்த யானை யாரும் எதிர்பாராத நிலையில் கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. பின்னர் அங்கிருந்து சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி வழியாக சென்று சண்முகாநதி அணை பகுதியில் முகாமிட்டிருந்தது. கடந்த 7 நாட்களாக அரிக்கொம்பன் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது.  இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை பிடிக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.


Odisha Train Accident: தண்டவாளத்தில் காதல் கவிதைகள்.. பதைபதைக்க வைத்த காட்சிகள்..ரயில் பெட்டிகளுடன் நொறுங்கிய கனவுகள்




இந்நிலையில் நேற்று இரவு அரிகொம்பன் யானை சின்னஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோயில் மலைப்பகுதியில் உலா வந்ததை கண்காணித்து வந்த வனத்துறையினர் இதனை அடுத்து யானையை மயக்க ஊசி செலுத்த ஏதுவான இடம் அமைந்ததால் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளை சின்ன ஓவுலாபுரம் பகுதிக்கு வரவழைத்து கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட ஹரிக்கொம்பனை வனத்துறையின் பிரத்தியோக வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சின்ன ஓவுலாபுரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தேனி நகர் பகுதியில் கடந்து அழைத்துச் செல்கின்றனர். அரிக்கொம்பன் யானையை வாகனத்தில் அழைத்துச் செல்லும் வரும் தகவலை அறிந்து ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தங்களது கைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.


Watch Video : 'கடமை இன்னும் முடியல'..உணர்ச்சிவசப்பட்டு அழுத ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்


மேலும் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதிகளில் விடப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.ஆனால் அரிக்கொம்பனை எந்தப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று வனத்துறை சார்பில் இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாமலே உள்ளது. மேலும் யானையின் துதிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளித்த பின்பு வனப்பகுதிக்குள் விடப்படுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண