மதுரையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே போடேந்திரபுரம் விளக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த சாலையில் தேனி சமதர்மபுரம் பகுதியைச் சேர்ந்த அரசாங்கம் (57) பேருந்தின் முன்பக்கம் மோதி பேருந்து அடியில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சிறிது தூரம் பேருந்து இழுத்துச் சென்ற நிலையில் திடீரென பேருந்து தீப்பிடிக்க தொடங்கியது.


சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..




இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓட தொடங்கினர். இதில் பேருந்து அடியில் சிக்கிக் கொண்ட அரசாங்கம் வெளியே வர முடியாமல் மேலும் தீ பற்றி எரிய தொடங்கியது. பின்னர் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் மற்றும்  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .


நம்ம ஊரு சாப்பாடு.. இட்லி, தோசை, காபி என வரிந்துகட்டி சாப்பிட்ட ஹன்சிகா.. இதுதான் ஸ்பெஷல்..




Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து


மேலும் தீ மளமளவென தீ எரிய தொடங்கிய நிலையில் போடியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைத்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இதில் அரசாங்கம் என்பவர் பேருந்து அடியில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் தெரிந்த அரசாங்கத்தின் உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.