மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு என்ற இன்ஸ்டாகிராம் கேப்ஷனுடன் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் முடித்துவிட்டு பதிவிட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
சமீபத்தில் சென்னை பத்திரிகையாளர்களிடம் விமான நிலையத்தில் பேட்டியளித்த ஹன்சிகா, திருமண வாழ்க்கை மிக நன்றாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியிருந்தார். மேலும், திருமண வாழ்க்கை உங்கள் திரை வாழ்க்கையை பாதிக்கவில்லையா என்னும் கேள்விக்கு, நாம் இந்த தலைமுறையில் வாழ்கிறோம். என் திருமண வாழ்க்கை என் சினிமா வாழ்க்கைக்கு இடையூறாக இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்
எப்பவும் போல, இப்படியே எப்பவும் சந்தோஷமா இருங்க ஹன்சிகா மோத்வானி.. வாழ்த்துக்கள்..