கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்துள்ள குல்பர்கா என்ற குல்பர்கி  பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட உறவினர்கள்,  கடந்த 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் சுற்றுலா வந்த நிலையில், இன்று 05.06.24  சுற்றுலா முடித்துவிட்டு கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.



தலைகீழாக 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் -  சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்


தமிழகம் - கேரள எல்லையில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலை வழியாக கார் வந்து கொண்டிருந்தது. அப்போது நான்காவது கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை திருப்பியபோது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து தலைகீழாக கவிழ்ந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.


Party Wise Vote Share: திமுக முதல் இமகமுக வரை: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவீதம் இதுதான்!




ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வைஷ்ணவி 12, கிருத்திகா 18, அம்பிகா 42, கரண் 11, விஜய் 31 ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சஞ்சீவி ரெட்டி (48) என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களை போடி குரங்கணி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு  முதலுதவி செய்த பின் கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி




இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெளிமாநிலத்தலிருந்து சுற்றுலா வந்தவர்கள் இங்கு விபத்தில் சிக்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.