முன்னே சென்ற பயணிகள் ஆட்டோவை முந்தி செல்ல முற்பட்டபோது, ஆட்டோவின் மீது கார் மோதிய விபத்தில் நான்கு வயது சிறுவன், ஆட்டோ ஓட்டுனர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பெண்கள் காயமடைந்தனர்.
விபத்து நடந்த போது அவ்வழியாக சென்ற தேனியை பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரசுராமபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பின்னே வந்த கார் முந்தி செல்ல முற்பட்டபோது, ஆட்டோவின் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 4-வது நாளாக இன்றும் கைது!
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 வயது சிறுவன் பவின்பாண்டி, ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் (வயது 50) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் விபத்தில் காயமடைந்த பெண்களை உடனடியாக வத்தலகுண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் பலியான சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து முகத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..
காவல்துறை விசாரணையில், கொடைக்கானலை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வத்தலகுண்டில் உறவினர்களின் திருமண விழாவிற்கு செல்வதற்காக நேற்று கெங்குவார்பட்டி வந்த உறவினர்கள் வீட்டில் தங்கிய நிலையில் இன்று காலை திருமண விழாவிற்கு அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் ஆட்டோவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்துவிட்டு ரமேஷ் மற்றும் மேலும் அவரது உறவினர்கள் காரில் பின் தொடர்ந்து சென்று உள்ளனர். அப்பொழுது பரசுராமன் புறம் பகுதியில் உறவினர்கள் சென்ற ஆட்டோவை ரமேஷ் மற்றும் உறவினர்கள் சென்ற கார் முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நடந்து சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது