தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி பெருமாள். இவருக்கு மனைவி மகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பெருமாள் தேனி பங்களாமேடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த போலீஸ் ஜீப் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெருமாள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பெருமாளின் மனைவி மகேஸ்வரி விபத்தில் இறந்த கணவருக்கான இழப்பீடு கேட்டு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இந்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து மகேஸ்வரி மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அரசு சார்பில் 13 லட்சத்து 84 ஆயிரம் ருபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று வரை அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்காமல் இருந்து வந்த நிலையில், மகேஸ்வரி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை நிறைவேற்றுதல் குறித்து மனு தாக்கல் செய்தார். அதன் பெயரில் வட்டியுடன் கூடிய இழப்பீட்டு தொகை 14 லட்ச ரூபாய்க்கு பதில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் 7 லட்சம் மதிப்பிலான ஜீப்பையும் 3 லட்சம் மதிப்பிலான 2 கார்கள், ஒரு லட்ச ரூபாய்க்கான 3 ஏசி இயந்திரங்கள் ஆகியவற்றை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு தேனி மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்யப் போவதாக கூறினர். இந்த நிலையில் ஜப்தி நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற நேர்முக உதவியாளர் பேசிய அதன் பின்னர், ஜப்தி செய்ய வந்த கோர்ட் பணியாளர்களிடம் நேர்முக உதவியாளர் பேசியபோது இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கூறிய நிலையில், நீதிமன் பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அங்கிருந்து கிளம்பினார். நீதிமன்றத்திலிருந்து மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்ய வந்தபோது அங்கிருந்து எடுத்துச் செல்லபட்டு நீதிமன்ற பணியாளர்கள் திரும்பி சென்றதும் வாகனம் மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்க
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!