பொது இடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞரை அவதூறாக தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்து தேனி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.




 தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியைச் சேர்ந்த  முத்துரெங்கன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய வகுப்பைச் சேர்ந்த இளைஞர், வடகரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக  சென்ற பொழுது,  வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் வழி மரித்து  அதிக வேகமாக சென்றதை தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக பாதிக்கப்பட்ட முத்துரங்கன் கொடுத்த புகாரின் அடிப்படையில்,


Aman Sehrawat: அடி தூள்..ரயில்வேயில் பதவி!அமன் ஷெராவத்திற்கு அடித்த ஜாக்பாட்


பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில்  எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


TNPSC Group 1 Notification: நடந்து முடிந்த குரூப் 1 தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!


Ola Roadster : அசத்தும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.. Roadster எனும் புது மின்சார பைக்.. வியக்கவைக்கும் விலை!


இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு  குற்றவாளி சசி என்ற இளைஞருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து குற்றவாளி சசியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.