தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, கடந்த ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் . இன்று இரு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.




இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவும் முதல் அலையிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. முழு பொதுமுடக்கத்தின்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று இலக்க எண்களாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது தளர்வுகள் கூடிய ஊரடங்கு நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு இரு இலக்க எண்களாகவே ஐம்பதுக்கும் கீழ் உள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில்  இன்று  21 நபர்களுக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31832ஆக உள்ளது. இன்று மட்டும் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30967-ஆக குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதுவரையில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இதுவரையில் 607 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இது வரையில் 238454 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் முதல் டோஸ் 203763 பேரும், இரண்டாம் டோஸ் 34691 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.  அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் இது வரையில் 178034 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் முதல் டோஸ் 149932 பேரும், இரண்டாம் டோஸ் 28102 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.




அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று 27நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்படைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இதுவரையில் 42625 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இன்று கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 13 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஆதலால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41795 ஆக குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 246257 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 260323 பேருக்கும் இரண்டாவது டோஸ் 399349 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்த நிலையில் இன்று 7 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது.  தேனி மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 775 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1,48,182 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு  2,775  ஆக உள்ளது.


மேலும் படிக்க தெரிந்துகொள்ள,


தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!