கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேனி வனத்துறையை  மாற்றி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தோல் வறட்சியாக இருந்தால் இதை செய்தால் போதும்.. இந்தாங்க நச் டிப்ஸ்!



தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி  அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின்  மலையைச் சுற்றி  கிரிவலப் பாதை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  எனவே அப்பகுதி  விவசாய நிலங்களுக்கு செல்லுகின்ற விவசாயிகளும் மற்றும் கிரிவலப்பாதையில் பொதுமக்களும்  நாள்தோறும் மாலை  நேரங்களில்  கிரிவலம் செல்வது வழக்கம்.  இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி  மாலை கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து  பெரியகுளம்  காவல்துறைக்கு தகவல் தெரிவித்த  நிலையில்  தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்  மற்றும்  பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து  கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் மாலை நேரங்களில் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தினர்.



இதனை தொடர்ந்து  தேனி வனச்சரகர்  சாந்தக்குமார் தலைமையிலான வனதுறையினர்  சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில்வனத்துறை வைத்த  கேமராவில் சிறுத்தை நடமாட்டம்  பதிவாகவில்லை, இருந்த போதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் தெரிவித்திருந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் சிறுத்தையை பிடிக்க கடந்த மாதம் 27 ஆம் தேதி இரண்டு கூண்டில்ஆட்டுக்குட்டி கட்டிவைக்கப்பட்டது. கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்கள் மேலான நிலையில் இன்றுவரை சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட 2 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.



 சிறுத்தையை  பிடிக்க வனத்துறையினர் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கைலாசநாதர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் அப்பகுதியில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் இடையே தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாற்று முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


அதேவேளையில், தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வரும் வனத்துறையினர், விரைவில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


மேலும் படிக்க, 


கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு


 


பிறந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவமனை.. அடக்கம் செய்யும் போது துடித்த இதயம்!