தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.  தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆனநிலையில் தேனி மாவட்டத்தில் இதுவரை போதுமான அளவு மழை பெய்யவில்லை. அதற்கு மாறாக கோடை காலங்களில் நிலவும் வெயிலின் தாக்கத்தை போல வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. போதுமான மழை இல்லாத காரணத்தால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.



இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வந்தது.  அணையில் நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகை அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் பகுதியின் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 


வைகை அணையை பொறுத்தவரையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே நீர்ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தேனி மாவட்டத்திற்கு திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 915 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் உயர்ந்துள்ளது.



நேற்று அணையின் நீர்மட்டம் 50.03 அடியை எட்டியது. இன்றும் அதே நீர் அளவு மட்டத்தை தொடர்ந்து வருகிறது மேலும் தொடர்ந்து மழை பெய்தால் வைகை அணைக்கு கூடுதல் நீர்வரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தேனி மாவட்டத்தின் மற்ற அணைகளின் நிலவரம் பின்வருமாறு:-


Periyardam: 121.75 (142)feet
Capacity: 2975 Mcft
Inflow: 1104 cusec
Outflow: 1200 cusec


Manjalar
Level- 53.65(57) feet
Capacity:408.19 Mcft
Inflow: 11 cusec
Outflow: 0 cusec


Sothuparai dam 
Level- 90.20 (126.28)feet
Capacity: 49.43 Mcft 
Inflow: 3 cusec
Outflow: 3 cusec