வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடிநீருக்கான தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பு. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வைகை ஆறு செல்லும் வழியில் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணை, இந்த அணை மூலம் மதுரை மாவட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கான விவசாய தேவைக்கான நீரையும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரைக்கொண்டே பயன்படுகிறது.



அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது.  இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும். கடந்த மாதத்தில் டவ்தே புயல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொட்டக்குடி ஆறு, போடிமெட்டு, குரங்கணி போன்ற மலையடிவார பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் நீரானது நேரடியாக வைகை அணையை சென்றடைந்து அணையில்  நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீண்ட மாதங்களாக வைகை அணையில் 61 அடிக்கு மேல் நீர்த்தேக்கம் இல்லாமல் இருந்த வந்தநிலையில்,  டவ்தே புயலின் போது பெய்த கனமழை எதிரொலியால் சில நாட்களிலேயே நீர்மட்டமானது உயரத் தொடங்கியது. இதனடிப்படையில் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனத்திற்கு, 45,041 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு தேவையான தண்ணீரானது வினாடிக்கு 900 கன அடி வீதம் வைகை அணையிலிருந்து 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீரானது திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தண்ணீரும் திறந்து விடப்பட்டது.



இதனால் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் இரு மாவட்ட பகுதி விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து தற்போது வரை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கும், குடி நீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் முல்லை பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்  தண்ணீர் வைகை அணையையும் சென்றடையும். இதனால் வைகை அணையில் தொடர்ந்து நீர் மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆதலால் திண்டுக்கல், மதுரை இரண்டு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால்  வைகை அணைக்கு கூடுதல் நீர் வரத்து வரத்தொடங்கியதாலும் தற்போது அனையில் நீர்மட்டமானது 67.03 அடியாக உள்ளது. அணையில் வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.