”கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. அதே போல் தடுப்பூசி தட்டுப்பாடும் குறைந்து, ஒரு நாளிற்கு 3.2 லட்சம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள்  கையிருப்பு உள்ளது” என சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 6 ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர்  கொரானா பாதிப்பால்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கருப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுராஜா. இவரது மனைவி மகாராணி செவிலியராக உள்ளார். 34 வயதுடைய  இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  பணியாற்றுகிறார்.



கொரானா முதல் அலையில் இருந்தே கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த செவிலியர் மகாராணிக்கு சிகிச்சை பலனளிக்காததால்  இன்று மாலை உயிரிழந்தார்.  செவிலியர் மகாராணியின் பிரிவால் அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 279- நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69880-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1420- நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 62937-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1022 - இருக்கிறது. இந்நிலையில் 5921 கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.



விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 273 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42426-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 444 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 38897-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும்  8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 487 இருக்கிறது. இந்நிலையில் 3042 கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 145 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16191-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 181 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14627-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 181 இருக்கிறது. இந்நிலையில் 1383 கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 115நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18682-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 371- நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17285 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1 நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 301 இருக்கிறது. இந்நிலையில் 1096 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 151 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25505-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 369 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 23572-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 259 இருக்கிறது. இந்நிலையில் 1674 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரையில் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிஞ்சுக்க இத கிளிக் பண்ணுங்க  - மதுரை : தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டதா? 5 மாவட்ட கொரோனா நிலவரம் என்ன?