மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,” நாடாளுமன்றத்திற்கு கூட நான் போகவில்லை, மதுரையில் நடைபெறும் மணிப்பூர் போராட்டத்தில் அழைப்பு வந்தவுடன் இங்கு வந்து விட்டேன். பட்டியல் இனமும், பழங்குடியினர் இனமும் ஒன்றில்லை. பழங்குடியினர் சமுதாயத்திற்கு தீண்டாமை கிடையாது. இங்கு அதிகம் படித்தவர் போன்று பலர் நடந்து கொள்கின்றனர். ஆனால் அம்பேத்கர் அளவிற்கு எந்த ஒரு உயர் சாதியினரும் படிக்கவில்லை. மணிப்பூருக்கு பாஜக செல்லாத வரை இரு சமூகத்தினரும் இணக்கமாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் இருந்தனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது போல் பாஜக இங்கு சென்றவுடன் ஊரே விளங்காமல் போய்விட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளே நுழைந்தவுடன் அங்கு வெறுப்பு அரசியலையும் நுழைத்து விட்டனர்.
முதலில் மணிப்பூரில் உள்ள மைத்தி மக்கள் எங்களையும் பழங்குடியினர் மக்கள் ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எதற்காக என்றால் பழங்குடியினர் மட்டும் தான் அங்குள்ள மலைப்பகுதியை விவசாயம் செய்ய முடியும் அதனால் இவ்வாறு கோரிக்கை வைத்தனர். மணிப்பூர் முதல்வருக்கு கிராயின் செடிகளை வளர்க்க முயற்சி செய்தனர். மைத்தி மக்களின் பழங்குடியினர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுகிறோம், என பாஜக உறுதியளித்து., அந்த மலைப்பகுதியில் நல்ல விவசாயம் செய்ய முடியும் என்பது தான் பிரச்சனைக்கு காரணம். அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மணிப்பூர் மலைப்பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை சுரண்ட வேண்டும். அதற்காக தான் இரு சமூகத்துக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு பெண்ணை நேரடியாக தான் தாக்க வேண்டும் என்பது இல்லை. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் whatsapp டிபி-யில் வைக்கும் படத்தை மாத்தி சித்தரிக்க முடியும். இதுபோன்று சமூக வலைதளங்களில் பரப்புவோர்களை கண்டுபிடிக்க வேண்டியது தான் அரசு கடமை. அதற்காக தான் சைபர் கிரைம் உருவாக்கப்பட்டது.
மணிப்பூர் கலவரத்தில் குக்கி மக்கள் ஒழிந்து கொண்ட போது அவர்களை காட்டிக் கொடுத்ததே காவல்துறைதான் என்று அந்த பெண்களே சொல்கின்றனர். காவல்துறை எங்களை காப்பாற்றவில்லை அவர்களிடம் ஒப்படைத்து விட்டது என்கின்றனர். தமிழகத்தில் நடப்பது போல் நடந்துள்ளது. தமிழகத்தில் போராட்டத்தில் நாங்கள் கத்தி பேசினால் காவல்துறை எங்களை அடிக்காது., கடிக்கும்.! மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்த கலவரத்திற்கு காரணம். மணிப்பூரில் நடந்த கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது., மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்” எனப் பேசினார்.