சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது, எடப்பாடி முதலமைச்சர் பதவி ஆசையின் காரணமாக அவசர கோலத்தில் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தார் - முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ் பேசியபோது..,” வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீட்டு வழக்கில் சமூகநீதியை காக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதியை காக்கும் வகையில் தி.மு.க அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய கூடாது.
இதை சற்று கவனிக்கவும் -
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
முதலமைச்சர் பதவி ஆசை காரணமாக ஒரு சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசர கோலத்தில் எடப்பாடி சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாக தான் தற்போது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள் கூட முழுமையாக நிரப்பபடவே இல்லாத நிலை தான் உள்ளது. அந்த சமூகத்தினர் இல்லாத இடங்களில் அரசு பணியிடம் நிரப்ப படாமல் உள்ள நிலைதான் தொடர்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கணக்கெடுப்பு இன்றி இட ஒதுக்கீடு வழங்குவது சரியான சமூகநீதியாக இருக்காது.
சமூக நீதி காக்க வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இந்த உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு தான். அ.தி.மு.க தோல்விக்கு காரணம் என்பது அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி சென்றது தான், மேலும் அ.தி.மு.க குறித்து கருத்து சொல்ல பிடிக்கவில்லை எனவும், நாங்கள் தேர்தல் நேரத்தில் 12 கோரிக்கைகளை வலியுறுத்தினோம் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தது என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!