முல்லை பெரியாறு அணையின் நிலவரம் குறித்து தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் கேரள அரசை கண்டித்தும்,  அணையில் நீர் தேக்குவது குறித்தும் தமிழகத்தின் உரிமை நில நாட்ட தவறியதாக தமிழக அரசை கண்டித்தும்  அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அறிவித்த நிலையில் தேனி மாவட்டத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.




இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கை போற்றும் வகையில் அவருக்கு தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மணிமண்டபமும் வெண்கலத்திலான  முழு உருவச் சிலையயும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  திறந்து வைத்தார். மேலும் அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். அப்போது முல்லை பெரியாற்றின் உறுதி தன்மை குறித்து கேரள மாநிலத்தினர் கேள்வி எழுப்பினர். 




  உச்ச நீதிமன்றம் பராமரிப்பு பணிகளை முடிப்பதற்காக 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக முல்லைப் பெரியாறு அணை குறித்து எந்தவித துரும்பையும் எடுத்துப் போடவில்லை இந்நிலையில் 2011இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஆணை பெற்று தந்தார். மேலும் பேபி அணை சிற்றணை பலபடுத்திய பின் 152 அடி வரை தேக்கி கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 999 வருடங்களுக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவும், முல்லை பெரியார் அணையை பராமரிக்கும் உரிமையும் தமிழகத்திற்கு  இருக்கிறது.


இந்நிலையில் கேரள சட்டமன்றத்தில் அவசர சட்ட திருத்தமாக 136 அடி வரையே தேக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.  இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடி நமது உரிமையை நிலை நாட்டினார். சிற்றணை, பேபி அணையை பலப்படுத்த  7 கோடி ஒதுக்கி ஒப்பந்தகாரரும் நியமிக்கப்பட்டார். அவரை கேரள அரசு பணி செய்ய விடாமல் இடைஞ்சல் கொடுத்ததாகவும்




 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுக ஆட்சியில் மூன்று முறை 142 வரை நீர்த்தேக்கிய பெருமை அதிமுகவையே சேரும். முல்லைப்பெரியாறில் சென்ற ஆட்சியில் வரை தண்ணீரை நாம் தான் திறந்தோம். ஆனால் தற்போது கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்துள்ளனர் அதுவும் 142 அடி வரை தண்ணீர் நிரம்பாமல் 138.5 அடி இருக்கும் போதே திறந்துள்ளனர். ஆனால் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனோ தமிழக அதிகாரிகள் துணையுடன் தான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். கேரள அரசின் முறையற்ற செயலுக்கும், அதற்கு துணை போகும் திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 9ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், 5 மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் கழகம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு  தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட உறுதுணையாக இருக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றப்பட்டது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண