திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். மேலும், கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து இருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையாள மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய  ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்த படமாகும். குகையில் விழுந்த தன்னுடைய நண்பனை காப்பாற்றக்கூடிய காட்சிகளை சிறப்பாக காண்பித்து இருக்கக்கூடிய இத்திரைப்படம் குணா குகை மீண்டும் பிரபலமாக துவங்கி இருக்கிறது .


மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, தூண் பாறை,  குணா குகை, பேரிஜம் உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 12 மைல் தொலைவில் இருக்கக்கூடிய இந்த சுற்றுலாத்தலங்களுக்கு வரும்பொழுது முதல் சுற்றுலா தளமாக இருப்பதுதான் மோயர் சதுக்கம் எப்பொழுதுமே மோயர் சதுக்கத்தில்தான் அதிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காணப்படும். ஆனால்  ‘மஞ்சும்மல் பாய்ஸ்’  திரைப்படம் வெளியானது முதல் மோயர் சதுக்கத்திற்கு அடுத்து உள்ள குணா குகையில் தான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இருந்துள்ளது.




கடந்த 2006 ஆம் ஆண்டு குணா குகையில் சுற்றுலா வந்த கேரளா பயணிகளுள் ஒருவர் குகைக்குள் விழுந்து இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டனர் . அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மஞ்சுமல் பாய்ஸ் இன்று அந்த குகைக்குள் விழுந்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பைன்பாரஸ்ட், குணா குகை பகுதிகளில் வந்தபோது சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்து சுற்றுலா பயணிகள் அவர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் உண்மை கதாபாத்திரங்கள் வருகையால் சுற்றுலா தலங்கள் பரபரப்பாக காணப்பட்டது.




மேலும் வனத்துறை அளித்துள்ள தகவலின்படி, கடந்த சில நாட்களில் மட்டும் குணா குகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்றும் முதல் சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய மோயர் சதுக்கத்திற்கு 20,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்திருக்கின்றனர் என்றும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குணா குகை கண்டு களித்துள்ளனர் என்றும் இனிவரும் நாட்களிலும் குணா குகைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.